மின் அட்டையில் ஒரு அளவு அங்கே கட்டச் சென்றால் ஒரு அளவு என குளறுபடிகள் நீடித்தன. அதன் பின்னர் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு அரசு கணினிமயமாக்கியது.இதனைத் தொடர்ந்து கரண்ட் பில் கட்டும் பணி எளிமைப்படுத்தப்பட்டாலும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று கட்டணம் செலுத்துவதை பொதுமக்கள் சிரமப்பட்டனர். சென்னை போன்ற பெருநகரங்களில் மின் வாரிய அலுலகங்கள் பல செயல்படுவதால் எந்த பகுதிக்கு எந்த அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற குழப்பமும் நீடித்தது.இதன் பின்னர் தொழில்நுட்பம் வளர வளர இணையதளத்தின் மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி ஆன்லைன் பேங்கிங் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த போன்பே மற்றும் கூகுள் பே போன்றவற்றை பணாம் செலுத்தும் வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் தவறாமல் பணம் செலுத்தும்படியும் உரிய தேதியில் நினைவூட்டும்படியும் அதில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டிருந்ததால் பயனர்கள் உரிய நேரத்தில் தவறாமல் பணம் செலுத்தினர்.ஆனாலும் கூட இணைய வசதி மற்றும் போன் பே பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவுதான். தற்போது தங்களுக்குள் தொடர்பு கொள்ள வாட்சப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தற்போது வாட்சப் வழியாக மின் கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
இனி வாட்சப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம்..!!
Please follow and like us: