பூவன், ரஸ்தாளி, செவ்வாழை, கற்பூரவள்ளி என்று வாழைப்பழங்களில் எண்ணற்ற வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகையான வாழைப்பழமும் பிரத்தியேகமான சத்துக்களையும், தித்திப்பான சுவையையும் கொண்டிருப்பவை.ஆனால் நாம் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு தோலை தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் வாழைப்பழத் தோலில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. இந்தத் தோல் இதய நோய், நீரிழிவு நோய் போன்ற பல நோய்களை குணப்படுத்தும் தன்மைகளை கொண்டுள்ளது. தோல் கசக்கும் என யாரும் சாப்பிடமாட்டார்கள்.ஜப்பானில் வாழைப்பழத்தை தோலோடு சாப்பிடுகின்றனர். ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள் மோங்கீ என்ற புதுவித வாழைப்பழத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த மோங்கீ வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட மிகவும் சுவையானது. இந்த வாழைப்பழத்தை ‘உறைய வைத்து வளர்த்தல்’ என்ற முறையில் வளர்க்கின்றனர்.பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்த முறை நடைமுறையில் இருந்துள்ளது. அந்தக் காலத்தில் இந்த வாழை வளர்வதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகின. ஆனால் தற்போது 4 மாதங்களே ஆகின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மோங்கீ வாழைப்பழம் சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் அனைவராலும் இதை வாங்க முடியாது. ஏனெனில் இந்த வாழைப்பழத்தை அதிக அளவில் விளைவிக்க இயலவில்லை. ஒரு வாரத்திற்கு வெறும் பத்து வாழைப்பழங்களையே விளைவிக்க முடிகிறது.
ஜப்பானில் தோலோடு சாப்பிடக்கூடிய வித்தியாசமான ‘மோங்கீ’ என்ற வாழைப்பழத்தினை உருவாக்கியுள்ளனர்..!!
Please follow and like us: