சீனாவில் பாண்டா கரடிகள் மிகவும் பிரபலமானது. சீனாவின் தேசிய விலங்கான பாண்டா கரடிகள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் உள்ள தைசோ விலங்கியல் பூங்காவில் பாண்டா கரடிகளை போன்ற உடல் அமைப்பு கொண்ட நாய் குட்டிகளை கொண்டு வந்து, அவற்றின் உடலில் வெள்ளை மற்றும் வண்ணம் பூசி காண்பதற்கு பாண்டா கரடிகள் போலவே மாற்றி உள்ளனர்.இதையடுத்து, தைசோ உயிரியல் பூங்காவில் மே 1 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு, பூங்காவுக்கு வந்த பார்வையாளர்களுக்கு ‘பாண்டா’ கரடிகளைப் போலவே காட்சியளிக்கும் பாண்டா நாய்களை காட்சிப்படுத்தினர். பாண்டா கரடிகள் என்று கூறப்படும் பாண்டா நாய்களை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர். அந்த விலங்குகளை பார்த்த அனைவரும் அதை பாண்டா கரடிகள் என நம்பினர்.அந்த பாண்டா கரடிகள் நாய்களைப் போல தலையை அசைத்ததால் சிலருக்கு குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த விலங்குகள் ஒருவகையான நாய் இனம் என்றும், அவைகளுக்கு பாண்டா கரடிகளைப் போல் வண்ணம் பூசப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது.
சீன உயிரியல் பூங்காவில் ‘பாண்டா’ கரடிகளைப் போலவே காட்சியளிக்கும் பாண்டா நாய்களை பார்த்த பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்..!!
Please follow and like us: