மலேசியா நாட்டின் பேராக் அருகே லுமுட் எனும் பகுதியில் கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 10 பேரும் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.மலேசிய கடற்படை தினத்தின் 90ம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரின் வால் பகுதியில் நடுவானில் மோதுகிறது.
Please follow and like us: