லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய்க்கு இது 68- வது படம் ஆகும். தி கோட் படத்தின் மூலம் நடிகர் விஜய் மற்றும் வெங்கட்பிரபு முதன்முறையாக இணைந்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது.
Please follow and like us: