உலகளவில் ஆண், பெண் ஆகிய இரண்டு பாலினங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், உரிமையும் மூன்றாம் பாலினத்தவர்க்கு முழுமையாக கிடைப்பதில்லை. சமுதாயத்தின் ஏளனமான பார்வை, புறக்கணிப்பு என பல்வேறு துன்பங்களை மூன்றாம் பாலினத்தவர்கள் தினந்தோறும் அனுபவித்து வருகின்றனர். உடலியல் மாற்றம் காரணமாக மூன்றாம் பாலினமாக உருவெடுப்போர் இந்த சமூகத்தில் படும் கஷ்டங்கள் இன்னும் முழுமையாக வெளிப்படுத்தப்படுவதில்லை.பண்டைய காலங்களோடு ஒப்பிடுகையில், நாகரீக, கலாச்சார முன்னேற்றத்தின் காரணாமாக மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அங்கீகாரம் சிறுக சிறுக கிடைத்து வருகிறது. உலகளவில் மூன்றாம் பாலினத்தவர்கள் மீதான பார்வை மெல்ல மெல்ல மாறி வருகிறது. புறக்கணிப்பை தாண்டி அவர்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனநிலை, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு பின் மனிதர்களிடம் உருவாகி வருகிறது.
பல்வேறு கட்ட முயற்சிகளுக்கு பின் மூன்றாம் பாலினத்தவருக்கென பள்ளிவாசல் முதன்முறையாக வங்கதேசத்தில் திறக்கப்பட்டுள்ளது..!!
Please follow and like us: