பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விரென் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடைபெற்றன.இந்த விழாவில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல பிரபலங்கள் பங்கேற்றனர். பில்கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ரியானா, இவாங்கா டிரம்ப், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Please follow and like us: