லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக, ஜெர்மனி பிராங்க் ஃபார்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானமும், சென்னையில் இருந்து பிராங்க் ஃபார்ட் செல்லும் விமானமும் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்னையில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜெர்மனி செல்லும் பயணிகள் தவித்து வருகின்றனர்.ஜெர்மனியில் உள்ள, லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான ஊழியர்கள், ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்படும் விமான சேவைகளை ரத்து செய்துள்ளன.
Please follow and like us: