மடகாஸ்கர் தீவு நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இந்நிலையில், மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு 600 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால் குற்றங்களை தடுக்கவும். குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.அந்த வகையில், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் நேற்று ( பிப்.11) மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் அமலுக்கு வர உள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு அதிரடி..!!
Please follow and like us: