மார்க் சக்கர்பெர்க் புதிதாக மாட்டு இறைச்சி தொழில் செய்ய முடிவு செய்திருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்..!!

Spread the love

ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் நிறுவனரான மார்க் சக்கர்பர்க், பல்வேறு துறைகளில் தடம் பதித்து பல சாதனைகளையும் புரிந்துள்ளார். அந்தவகையில் தற்போது மாடு வளர்ப்பு தொழிலில் களமிறங்கியுள்ளார். மாடுகளுக்கு சோளம், புற்கள் மற்றும் தீவணத்தைப் போட்டுப் பார்த்திருப்போம். ஆனால், மார்க் தனது நிறுவனத்தின் சிறந்த மாட்டு இறைச்சியை உருவாக்குவதற்காக தங்கள் பண்ணையில் உள்ள மாடுகளுக்கு உலர் கொட்டைகள், உள்ளூரில் தயாரிக்கப்படும் பீர் ஆகிவற்றை கொடுத்து வளர்த்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.வேலைப்பளுவுக்கு நடுவிலும் மார்க் சக்கர்பெர்க் தனக்குப் பிடித்ததைச் செய்யத் தவறுதே இல்லை. கடந்த காலங்களில் அவர் ரன்னிங், தற்காப்புக் கலையான ஜூஜிட்சுவில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். தற்போது ஹவாயில் இருக்கும் கவாய் எனும் தீவில் பாதியை தனக்கு சொந்தமாக்கியுள்ள மார்க், அங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பண்ணை ஒன்றை அமைத்து வருகிறார். 1,400 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து அதை சுற்றி சுவர் எழுப்பி வருகிறார்.இந்த நிகழ்வு குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட மார்க் சக்கர்பர்க், தனது நிறுவனத்தின் மாட்டிறைச்சியை சாப்பிடும் புகைப்படத்தை அதனுடன் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “உயர்தரமான மாட்டிறைச்சியை உருவாக்குவதே எனது இலக்கு. அதற்காக எனது பண்ணையில் வளர்க்கும் மாடுகளுக்கு மக்காடமியா கொட்டைகள் மற்றும் பீர் போன்றவை உணவாக கொடுக்கிறோம். இதன்மூலம், தரமான இறைச்சியை தயாரிக்கலாம். இந்த பீர் மற்றும் மக்காடமியா கொட்டைகளும் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக பல ஏக்கர் பரப்பளவில் மக்காடமியா மரங்கள் வளர்க்கப்படுகின்றன.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram