இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதேபோன்று, இந்தோனேஷியாவின் வடகடலோரப் பகுதியில் இன்று அதிகாலை 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.5 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்களைப் பாதுகாப்பாக இருக்க அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.அண்மைக்காலமாக நிலநடுக்கம், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் சீனா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.