செங்கோட்டையில் உள்ள எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளில் சுமார் 950 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இவர்களில் சிலர் காலையில் உணவு சாப்பிடாமல் வருவதை அறிந்த ஆசிரியர்கள் தலைமை ஆசிரியரிடம் இந்த தகவலை தெரிவித்து இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். அதன்படி தேவையான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது என்றும் இதற்கான செலவுகளை ஆசிரியர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வது என்றும் தீர்மானித்தார்கள். இதன்படி கடந்த ஒன்றரை மாதங்களாக மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. சுமார் 100 மாணவர்கள் பசியாறி வருகின்றனர். உணவுக்காக காலதாமதமாக மாணவர்கள் வருவதை குறைப்பதற்கும், பசியோடு இல்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவதற்கும் மாணவர்களுக்கு உதவும் இந்த ஆசிரிய பெருமக்களுக்கு பாராட்டுகள் குவிய தொடங்கியுள்ளது.
மாணவர்களின் பசி தீர்க்கும் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது..!!
Please follow and like us: