இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கும் இந்த உருமாறிய வைரஸ் தொற்றான ஜேஎன் 1 வைரஸே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கம் பகுதியை சேர்ந்த 42 வயதான நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் கடந்த 31ம் தேதி அன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், செ ன்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Please follow and like us: