நடிகர் பிரபாஸ் நாயகனாக நடிக்க இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளி வந்துள்ள திரைப்படம் ‘சலார்’. இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் இணைந்து டிரைலர் 150 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில் உலகமெங்கும் டிச.22ஆம் தேதி சலார் திரைப்படம் வெளியானது. அப்போது முதல் சலார் திரைப்படம் ரசிகர்களிடையே சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. காந்தாரா நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி, சிரஞ்சீவி உள்ளிட்டோர் சலார் குறித்து புகழ்ந்து பதிவிட்டார்கள். இதனை தொடர்ந்து சலார் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. இதன்படி, முதல்நாளில் சலார் ரூ.178.7 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே இதுதான் முதலிடம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2வது நாளில் ரூ.295.7 கோடியும், 3வது நாலில் ரூ.402 கோடி வரையும் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
சலார் திரைப்படம் திரையரங்கில் வெளியான நாள் முதல் ஒவ்வொரு நாளும் வசூல் சாதனை படைத்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது..!!
Please follow and like us: