சஞ்சய் குமார் தயாரிப்பில், தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படமாக “ஹிட்லர்” உருவாகிவருகிறது. முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக விஜய் ஆண்டனியின் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார்.
முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளார் படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறது தயாரிப்பு தரப்பு. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் முன்னதாக வெளியானது. இந்நிலையில், ஹிட்லர் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இசையிலும், வீடியோவும் ரசிகர்களின் மனதை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் இந்த டீசர் பகிரப்பட்டு வருகிறது.