இந்தியாவிலும் சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் அடுத்தடுத்து வரும் நிலையில், இந்த தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிப்பு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடுகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.இந்த நிலையில், கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தொற்று சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு தெற்காசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
Please follow and like us: