அதிகாலை வேளையில் கடும் பனிப்பொழிவு காணப்படும். அந்த வகையில், இன்று அதிகாலையில், திருச்சியின் மாநகர் பகுதிகளான முசிறி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி பொழிவு அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். கடும் பனிப்பொழிவு காரணமாக காலையில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமத்துக் குள்ளாகினர்.ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் வடகிழக்கு பருவமழை மூலம் மழை பெறும் மாதங்களாகும்.
Please follow and like us: