இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இந்த நிலையில் சௌதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்கு 2024-ம் ஆண்டு ஹஜ் புனித பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (டிச.21) முடிவடைய இருந்தது.இந்த நிலையில் அதிகளவிலான இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவதால் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இந்திய ஹஜ் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. இதனை தொடர்ந்து ஹஜ் பயணம் செய்பவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜனவரி 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
Please follow and like us: