நோஸ்ட்ராடாமஸ் 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு ஜோதிடர், தீர்க்கதரிசி, தத்துவவாதி, மருத்துவர் ஆவார். அவரது முழுப்பெயர் மைக்கேல் டி நாஸ்ட்ராடாமஸ். அவர் “அழிவின் தீர்க்கதரிசி” என்றும் அங்கீகரிக்கப்படுகிறார். அவர் 1555 இல் எழுதிய புகழ்பெற்ற புத்தகமான ‘லெஸ் ப்ரோபசீஸ்’ மூலம் அறியப்படுகிறார். இது 942 கவிதை வரிகளின் தொகுப்பு. இது எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி கூறுகிறது.நோஸ்ட்ராடாமஸின் புத்தகத்தில் ‘தீவுகளின் ராஜா’ ‘பலத்தால் விரட்டப்படுவார்’ என்று எழுதப்பட்டுள்ளது. நாஸ்ட்ராடாமஸ் மூன்றாம் சார்லஸ் அரசரைப் பற்றி பேசுகிறார் என்று சிலர் நினைக்கிறார்கள். IFL Science இன் படி, சார்லஸைப் பற்றிய மற்றொரு பத்தியில், ‘விரைவில் (ஒரு பேரழிவுகரமான போருக்குப் பிறகு) ஒரு புதிய மன்னர் முடிசூட்டப்படுவார், அவர் பூமியை நீண்ட காலத்திற்கு மகிழ்ச்சியாக ஆக்குவார்” என அவர் கணித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.மேலும் ‘சிவப்பு எதிரி பயத்தால் வெளிர் நிறமாகி, பரந்த கடலைப் பயமுறுத்துவார்’ என்று தனது கவிதை தொகுப்பில் தெரிவித்துள்ளார். இங்குள்ள சிவப்பு நிறம் சீனாவையும் அதன் சிவப்புக் கொடியையும் குறிப்பதாக சிலர் நம்புகின்றனர். அதே நேரத்தில், ‘கடற்படை போர்’ என்பது தைவான் தீவுடன் சீனாவின் பதற்றத்தை குறிக்கும். உலகின் மிகப்பெரிய கடற்படை சீனாவில் உள்ளது.தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய பட்டினி ஆகியவற்றையும் அவர் கணித்திருக்கிறார். சமீபகாலமாக அதிகரித்து வரும் காட்டுத் தீ மற்றும் உயரும் வெப்பநிலை காரணமாக காலநிலை பேரழிவை நாம் காண்கிறோம். அதன்படி நோஸ்ட்ராடாமஸ், ‘வறண்ட பூமி இன்னும் வறண்டு போகும், மேலும் பெரும் வெள்ளம் வரும்’ என்று எழுதியிருக்கிறார். அத்துடன், தொற்றுநோய் அலையால் பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நோஸ்ட்ராடாமஸ் 2024-ம் ஆண்டிற்கான அச்சுறுத்தும் கணிப்புகளை வெளியிட்டுள்ளார்..!!
Please follow and like us: