சமீபத்தில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு, நடிகர் விஜய் லியோ வெற்றி விழாவில் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில், தற்போது நயன்தாரா சூப்பர் ஸ்டார் குறித்து பேசியுள்ளதால் மீண்டும் விவாததுக்குள்ளாகி வருகிறது. அவரது ரசிகர்கள் பலரும் நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இது குறித்து, நடிகை மாளவிகா கூறியதாவது, “லேடி என்பதை எடுத்து விட்டு, பாலின சமத்துவமாக அனைவரையும் சூப்பர் ஸ்டார் என்றே அழைக்கலாம்” எனக் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து, இவர் நயன்தாராவை குறிப்பிட்டு பேசுகிறார் என விமர்சனம் வரவே, “நான் பொதுவாக சொன்னது. மூத்த நடிகையாக அவர் மீது மரியாதை இருக்கிறது” எனக் கூறியிருந்தார்.அன்னபூரணி திரைப்படத்தின் புரமோஷனுக்கான நேர்காணலில் நடிகை நயன்தாரா பேசியதாவது,
“லேடி சூப்பர் ஸ்டார் என 10 பேர் பாராட்டினால் 50 பேர் திட்டுவார்கள். அதனால் இயக்குநரிடம் என்னுடைய பெயர் மட்டும் போதுமென்று கூறினேன். என்னுடைய நோக்கம் அதை நோக்கி கிடையாது நான் என்ன மாதிரியானை கதைகளை மக்களிடம் கொண்டு செல்ல விரும்புகிறேன் என்பதை அந்த டேக் லைன் (சூப்பர் ஸ்டார் ) வைத்து முடிவுசெய்ய முடியாது. அது மக்கள் கொடுத்த அன்பு” எனக் கூறியுள்ளார்.