மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் தொடங்கியது. இந்நிலையில் இன்று தெலங்காவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற இந்த 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்த தேர்தல், 2024 லோக்சபா தேர்தலுக்கு முந்தைய கடைசி தேர்தல் என்பதால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் கே.சந்திரசேகர் ராவின்(கேசிஆர்) பாரதிய ராஷ்டிர சமிதிக்கும், காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அதேபோல், மக்களவை தேர்தலில் தென் மாநில மக்களிடையே பாஜகவின் பலத்தை நிரூபிக்க தெலங்கானா தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதற்காக பல மாதங்களாக தெலங்கானாவை குறிவைத்து பாஜக தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில், தெலங்கானாவில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதனை அடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி அதிகப்பட்ச இடங்களை பிடித்து ஆட்சியை பிடிக்கும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் 60 தொகுதிகளை பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.
இந்நிலையில் பல்வேறு கருத்துகணிப்புகளில் காங்கிரஸ் கட்சிதான் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக NDTV-ல் 63-லிருந்து 79 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று JAN KI BAAT – ஐ பொறுத்தவரை 48 தொகுதிகளில் இருந்து 64 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறும் என தெரிவித்துள்ளது. இதே போன்று REPUBLIC TV – ஐ பொறுத்தவரை 58-லிருந்து 68 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.இதன்படி தொடச்சியாக பல்வேறு கருத்துகணிப்புகள் தெலங்கானாவில் சந்திர சேகர ராவை ஆட்சி கட்டிலில் இருந்து இறக்கி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதையே உறுதி செய்கின்றன.
NEWS EDITOR : RP