ரேபிஸ் நோயின் அறிகுறிகள்..!! ரேபிஸ் தாக்குதலுக்கு ஆளானவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை..!!

Spread the love

காடுகளில் வாழும் சிலவகையான நரி, ஓனாய், வவ்வால்கள் போன்ற வனவிலங்குகள் மற்றும் வீட்டு விலங்கான நாய் போன்றவற்றின் உடலில் வழக்கமாக வாழும் இந்த ரேபிஸ் வைரஸ், அந்த விலங்குகள் நேரடியாக கடிப்பதாலோ அல்லது, அந்த விலங்குகளால் கடிபட்ட விலங்கள் கடிப்பதாலோ எச்சில் வழியே பரவுவதாக தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். இந்த நோயானது மனிதர்களுக்கு பெரும்பாலும் நாய்கள் மூலமே பரவுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.மனித உடலுக்குள் நுழையும் இந்த வைரஸ், 5 ஆண்டுகள் வரை செயல்படாமல் இருந்துவிட்டு அதன் பின்னர் கூட தாக்கலாம் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எச்சில் வழியாக பரவி ரத்தத்தில் கலக்கும் இந்த வைரஸ் நோய் மூளை அழற்சியை ஏற்படுத்துவதாகவும், மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து, பின் மூளையையும் நேரடியாக பாதிப்பதால் மரணம் விளைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பின்றி தெருக்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை எளிதாக பாதிக்கும் இந்த ரேபிஸ் வைரஸ், அந்த தெருநாய்கள் கடிப்பதால் மனிதர்களுக்கும் பரவி கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

புரோட்ரோம், நியுரோலாஜிக்கல், கோமா மற்றும் மரணம் என 5 நிலைகளாக பிரிக்கப்படுகிறது. வைரஸ் பரவுதல் முதல் அறிகுறிகள் தென்படும் நிலை இன்குபேஷன் எனப்படுகிறது. இந்த நிலை, நோய் பரவும் விதத்தைப் பொறுத்து ஒரு வாரத்தில் இருந்து ஒரு வருடம் வரை மனிதருக்கு மனிதர் வேறுபடும். அறிகுறிகள் தென்படத் துவங்கும் ஆரம்ப நிலை புரோட்ரோம் எனப்படுகிறது. அந்த நிலையின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, பசியின்மை, காயம் ஏற்பட்ட இடத்தில் கூச்ச உணர்வு, உணர்வின்மை, வலி போன்றவை ஏற்படலாம்.

அறிகுறிகள் முற்றிய நிலை நியூராலாஜிக்கல் எனப்படுகிறது. இந்த நிலையின்போது வைரஸ் மூளையழற்சியை ஏற்படுத்தி, மத்திய நரம்பு மண்டலம் மற்றும் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த சமயத்தில் கவலை, குழப்பம், மயக்கம், பிரம்மை, ஹைட்ரோஃபோபியா (தண்ணீரால் பயம்), தூக்கமின்மை, தசை வலிகள், விழுங்குவதில் சிரமம், ஏரோஃபோபியா (காற்றால் பயம்) போன்ற அறிகுறிகள் ஏற்படும்.மூன்றாம் நிலையை கடப்பவர்கள் அடுத்த 10 நாட்களில், பக்கவாதம் அல்லது கோமா என்ற நிலையை அடைவதாகவும், முறையான ஆதரவு, கவனிப்பு இல்லாமல் அடுத்து 2 அல்லது 3 நாட்களில் மரணம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நோய் வருவதற்கான அதிக அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மருத்துவர்களால் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகிறது. பாதிப்பு ஏற்பட்ட நாள், 7 ஆம் நாள், 21 ஆம் நாள், 28 ஆம் நாள் மற்றும் அதிகபட்சமாக 90 ஆம் நாள் என 5 தவணைகளாக இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram