நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள். ஐஸ்வர்யா, விஷால் நடித்த `பட்டத்து யானை’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘சொல்லி விடவா’ என்ற படத்தில் நடித்தார். இப்போது அர்ஜுன் இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இவரும் நடிகர், தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் காதலித்து வந்தனர்.உமாபதி, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்ற படம் மூலம் அறிமுகமானார். அடுத்து, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ‘தண்ணி வண்டி’ உட்பட சில படங்களில் நடித்தார். இருவீட்டு குடும்பத்தினரும் இவர்களது திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. சென்னையை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள அர்ஜுனுக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோயிலில் நிச்சயதார்த்தம் நடந்தது.
NEWS EDITOR : RP
Please follow and like us: