வெங்காய விலை சராசரியாக 57 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கிலோவுக்கு ரூ.47 என்றளவில் விலை உயர்ந்துள்ளது. முடைக்கால கையிருப்பை விடுவித்ததன் மூலம் வெங்காய விலையை கிலோவுக்கு ரூ.25 என்றளவில் சில்லறை விற்பனைச் சந்தையில் கிடைக்கச் செய்து நுகர்வோர் சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.30-க்கு விற்பனையானது என்று நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இன்று (அக்.27) டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் கிலோ ரூ.30-க்கும் பிற பகுதிகளில் கிலோவுக்கு ரூ.37 என்றளவிலும் விற்கப்படுகிறது. சில இடங்களில் உச்சபட்சமாக ரூ.47க்கு விற்பனையாகிறது.
வெங்காய விலையேற்றத் தடுப்பு நடவடிக்கை குறித்து நுகர்வோர் விவகாரத் துறை செயலர் ரோகித் குமார் சிங் கூறூகையில், “ஆகஸ்ட் பாதியில் இருந்தே நாங்கள் முடை கையிருப்பில் இருந்து வெங்காயத்தை பகுதியாக விடுவித்து வந்தோம். இப்போது கூடுதலாக விடுவிக்கப்படும். நுகர்வோர் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றார்.ஆகஸ்ட் பாதியில் இருந்து 22 மாநிலங்களின் வெவ்வேறு பகுதிகளுக்கும் 1.7 லட்சம் டன் வெங்காயம் விடுவிக்கப்பட்டுள்ளது. என்சிசிஎஃப், நேஃபட் என்ற இரண்டு கூட்டுறவு அமைப்புகளின் வாயிலாக சில்லறை சந்தைக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. டெல்லியில் மானிய விலையில் வாகனங்கள் மூலம் வெங்காயம் நுகர்வோருக்குக் கொண்டு சேர்க்கப்படுகிறது.
NEWS EDITOR : RP