தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | Chance of Heavy Rain in 18 districts of Tamil Nadu

Spread the love

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று( 6ம் தேதி ) ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வரும் 8ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 9ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இன்று மழைக்கு வாய்ப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

7 மற்றும் 8ம் தேதி: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9 மற்றும் 10ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 – 4 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 6ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

7ம் தேதி மற்றும் 8ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

9ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Chance of heavy rain in 18 districts of Tamil Nadu – Chennai Meteorological Department announcement

In this regard, the Chennai Meteorological Center has issued a report: A downward circulation is prevailing over the coastal areas of northern Tamil Nadu. An atmospheric low circulation has formed over the Southeast Bay of Bengal today (6th). Due to this, a low pressure area may form in those areas by the 8th. It will intensify into a depression by 9th and move northwards and intensify into a cyclonic storm over Central Bay of Bengal.

Chance of Rain Today: Light to moderate rain with thunder and lightning at a few places over Tamil Nadu, Puducherry and Karaikal. Iranipet, Vellore, Tirupattur, Thiruvannamalai, Krishnagiri, Dharmapuri, Salem, Namakkal, Kallakurichi, Perambalur, Tiruchirappalli, Karur, Theni, Dindigul, Tirupur, Coimbatore, Nilgiris and Erode districts are likely to receive heavy rain.

7th and 8th: Light to moderate rain with thundershower at a few places over Tamil Nadu, Puducherry and Karaikal. Tamil Nadu, Puducherry and Karaikal regions may experience light to moderate rain on 9th and 10th. The maximum temperature may gradually increase by 2-4 degrees Celsius in Tamil Nadu, Puducherry and Karaikal till 10th.

Chennai and its suburbs will remain partly cloudy for the next 48 hours. Light/moderate rain with thundershower at a couple of places over the city. Maximum temperature will be around 35 degree Celsius and minimum temperature will be around 27 degree Celsius.

Warning for Fishermen: Cyclonic winds of 40 to 50 km/h and occasional 60 km/h are likely to occur over Southwest Bay of Bengal and adjacent North Tamil Nadu coastal areas on 6th.

Cyclonic winds with a speed of 40 to 50 kmph and occasional gusts of 60 kmph are likely to prevail over South East Bay of Bengal and South Andaman Sea areas on 7th and 8th.

Cyclonic winds with a speed of 50 to 60 kmph and occasional speed of 70 kmph are likely to prevail over Southeast Bay of Bengal and adjoining Southwest Bay of Bengal, Central Bay of Bengal and Andaman Sea on 9th.

On 10th, cyclonic wind speed of 60 to 70 kmph and occasional speed of 80 kmph is expected in South East Bay of Bengal and cyclonic wind speed of 50 to 60 kmph and occasional speed of 70 kmph in adjoining South West Bay of Bengal, Central Bay of Bengal and Andaman Sea.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram