ஐஸ்லாந்து நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் ஆண்களின் வருமானத்தை விட 20 சதவீதம் குறைவாகவே பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற பொதுநல சேவைகளில் அதிக அளவில் பெண்கள் ஈடுபட்டிருந்தாலும், போதிய அளவிலான ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் இதனை கண்டித்து நேற்று ஐஸ்லாந்து நாட்டில் உள்ள 90% பெண்கள், பணிகளை புறக்கணித்துவிட்டு ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுனர். 50 ஆண்டுகளுக்கு முன்பே சம வேலைக்கு சம ஊதியம், பாலின சமத்துவம் வேண்டி போராட்டம் துவங்கிய போதும், இன்று வரை போராட வேண்டிய சூழ்நிலை தொடர்ந்து வருவதாக கேத்ரின் தெரிவித்துள்ளார். பலர் தங்களது வீடுகளிலேயே தங்கியிருந்தனர். பெண்கள் முன்னெட்டுத்த இந்த போராட்டத்திற்கு கூடுதல் வலிமை சேர்க்கும் வகையிலும், ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரின் ஜாக்கோப்ஸ்டாட்டிர், நேற்று ஒரு நாள் முழுவதும் தனது பணிகளை புறக்கணித்தார்.
NEWS EDITOR : RP