தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரமாண்டமாக இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பை சம்பாதித்திருந்த லியோ திரைப்படம், அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான ‘லியோ’ திரைப்படம், தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் ரசிகர்களை தன்வசம் கட்டிப்போட்டுள்ளது.
முதல் 4 நாட்களிலேயே 400 கோடி வசூலைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதாவது உலகம் முழுவதும் நான்கு நாட்களிலேயே 400.5 கோடி ரூபாய் வசூலைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வேறெந்த தமிழ்ப் படமும் செய்யாத சாதனையாக கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி, இந்தியாவில் 200 கோடி, உலகம் முழுக்க 400 கோடி என வசூல் சாதனை படைத்திருக்கிறது லியோ திரைப்படம். தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் படத்தைப் பார்த்துவிட்டு திரும்பி வருகிறார்கள். ஒரு சிலர் சில குறைகளைச் சொன்னாலும், படத்துக்கு, பலத்த எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வந்த வண்ணம் இருக்கின்றனர்.
NEWS EDITOR : RP