சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தை சந்தித்து வந்த நிலையில் இன்று சரிவைக் கண்டுள்ளது.வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.78.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 20 பைசாக்கள் குறைந்து, ரூ.78.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.₹78,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,360 ஆகவும், கிராமுக்கு ரூ.5,670 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.45,280-க்கும், ஒரு கிராம் ரூ.10 குறைந்து ரூ.5,660-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து ஏறுமுகமாய் இருந்த தங்கத்தில் விலை இன்று சற்று குறைந்துள்ளதால், அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறையும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
NEWS EDITOR : RP