சித்தார்த்-ன் அண்ணன் திடீரென உயிர் இழக்கிறார். அதன் பின்னர் அவரது குழந்தை தனது அம்மாவை விட தனது சித்தப்பா மீது மிக பாசமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சித்தப்பாவை சித்தா என்று அன்பாக அழைக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த குழந்தை காணாமல் போகிறது. அந்தக் குழந்தை ஏன் காணாமல் போகிறது? குழந்தையை கண்டுபிடித்தார்களா? என்பதுதான் படத்தின் மீதி கதை.இப்படத்திற்கு இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். பாடல்களை விவேக், யுகபாரதி மற்றும் S.U.அருண் குமார் எழுதி உள்ளனர். முகப்பு பாடலை சந்தோஷ் நாராயணன் பாடி உள்ளர். கண்கள் ஏதோ பாடல் ஏற்கனவே ஹிட் ஆகி விட்டது. கடந்த2 வாரங்களுக்கு முன் வெளியான படங்களிலேயே சித்தா படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்பமாக இப்படத்திற்கு செல்லத் துவங்கியுள்ளனர். இந்த படத்திற்கு திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் உலகளவில் ரூ.25 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சித்தா திரைப்படத்தின் வரவேற்பைக் கண்ட ஓடிடி தளங்கள் இப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெற போட்டிபோட்டன. முடிவில், டிஸ்னி + ஹாட்ஸ்டார் நிறுவனம் பெரிய தொகைக்கு சித்தா படத்தை வாங்கியதாகக் கூறப்படுகிறது.
NEWS EDITOR : RP