நடிகர் விஜய்யின் லியோ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து இந்த வெற்றிக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் LCU இருக்குமா என்பது குறித்து தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தனது சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய லோகேஷ் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
படம் இன்னும் சில தினங்களில் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் டிக்கெட் விற்பனை சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷன்களிலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அனிருத் உள்ளிட்டவர்கள் மிகப்பெரிய அளவில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், தலைவர் 170-படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
NEWS EDITOR : RP