சிகாகோவில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இல்லினாய்ஸ், ப்ளைன்ஃபீல்ட் டவுன்ஷிப்பில் சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்தது. குற்றம் சாட்டப்பட்டவர், ஒரு பாலஸ்தீனிய முஸ்லீம் பெண்ணையும் அவரது 6 வயது குழந்தையை 26 முறை கத்தியால் குத்தியதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அவரது தாயார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் உயிர் பிழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (CAIR) சிகாகோ அலுவலகத்தின் தலைவர் அஹ்மத் ரெஹாப், இந்த தாக்குதலைக் கண்டித்ததோடு, பாதிக்கப்பட்டவர்கள் பாலஸ்தீனிய-அமெரிக்கர்கள் என்று கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட ஜோசப் கசுபா அந்தப் பெண்ணையும் அவரது குழந்தையையும் தாக்கிய போது, அந்த பெண் அவசர உதவி எண்ணான 911-ஐ அழைத்தார் என்று அமெரிக்க போலீசார் தெரிவித்தனர். “குழந்தை மற்றும் பெண் இருவரும் வீட்டின் படுக்கையறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களின் மார்பு மற்றும் கழுத்தில் ஆழமான கத்தி காயங்கள் இருந்தன. குழந்தையை காப்பாற்ற முடியவில்லை” என்று போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தையின் வயிற்றில் இருந்து 7 அங்குல கத்தியை டாக்டர்கள் எடுத்ததாக போலீசார் கூறினர்.
71 வயதான குற்றவாளி, பெண்ணின் வீட்டின் வெளியே தரையில் அமர்ந்து நெற்றியில் காயங்களுடன் காணப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர். அவர் மீது கொலை, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. “குழந்தை மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, வெறுப்புக் குற்றத்தின் கோணத்தில் முழு வழக்கையும் விசாரித்து வருகிறோம்” என்று போலீசார் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முஸ்லிம் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டது குறித்து சமூக ஊடகமான X இல் ட்வீட் செய்துள்ளார். அதில், “இல்லினாய்ஸில் ஒரு குழந்தையை கொடூரமாக கொலை செய்ததையும், குழந்தையின் தாயை கொலை செய்ய முயற்சித்ததையும் நேற்று அறிந்து ஜில்லும் நானும் வருத்தப்பட்டோம். எங்கள் பிரார்த்தனைகள் குடும்பத்துடன் உள்ளன, ‘பாலஸ்தீன முஸ்லீம் குடும்பத்திற்கு எதிரான இந்த வெறுப்பு செயலுக்கு அமெரிக்காவில் இடமில்லை.
NEWS EDITOR : RP