போர்ப்ஸ் இதழ் இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் (ரூ.7.63 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். கவுதம் அதானி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு 68 பில்லியன் டாலராக (ரூ.5.64 லட்சம் கோடி) உள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி சொத்து மதிப்பு சரிந்துள்ளதாக போர்ப்ஸ் இதழ் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது.
இந்தப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் ஷிவ் நாடார் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 29 பில்லியன் டாலராக (ரூ.2.40 லட்சம் கோடி)உயர்ந்துள்ளது. சாவித்திரி ஜிண்டால் (ரூ.2 லட்சம் கோடி), ராதாகிஷான் தமனி (ரூ.1.90 லட்சம் கோடி), சைரஸ் பூனாவாலா (ரூ.1.75லட்சம் கோடி), இந்துஜா குடும்பம் (ரூ.1.66 லட்சம் கோடி), திலிப் சங்வி (ரூ.1.57 லட்சம் கோடி), குமார் பிர்லா (ரூ.1.45 லட்சம் கோடி), ஷபூர் மிஸ்திரி (ரூ.1.41 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் உள்ளனர். அதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி அளவுக்கு இழப்புஏற்பட்டது.
NEWS EDITOR : RP