2000 வருடங்களுக்கு முன்பு அழகு சாதனைப் பொருட்களை ரோம பேரரசின் பழமையான நகரமான அஜினோயில் பயன்படுத்தியுள்ளதாக சமீபத்தில் வெளியான தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை ரோம காலத்தில் உள்ள பெண்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததில், நகைகள் மற்றும் வாசனை திரவியங்கள் மற்றும் ஒப்பனை போன்ற அழகுசாதனப் பொருட்களை விற்கும் ஒரு கடையை இருந்ததாகவும் அந்த ஆய்வுகள் முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நெக்லஸ்கள் மற்றும் ஹேர்பின்களில் இருந்து பல்வேறு மணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.தொல்லியல் ஆராய்ச்சியில் கண்டுபிடித்த பழங்கால கடைகளில் சிப்பி ஓடுகள் மற்றும் வாசனை திரவிய பாட்டில்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை ஒப்பனைகளை மற்றும் அழகு சாதனை பொருட்களை சேமிக்க பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
NEWS EDITOR : RP