சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் 68 வயதான முதியவர் ரபுதீன். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அபிதாபியில் வேலை செய்து வந்தார். அதன் பிறகு அவரது மனைவியுடன் ஓட்டேரியில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இரண்டு மகன்களும் ஜெர்மனியிலும், மகள் சவுதியிலும் வசித்து வருகின்றனர். கணவன்- மனைவி இருவரும் ஓட்டேரி மற்றும் அவர்களுக்கு சொந்தமான பெரம்பூர் ஜமாலியா ரோடு பகுதியில் உள்ள மற்றொரு வீடு என இரண்டு வீட்டிலும் மாறி மாறி குடியிருந்து வருகின்றனர்.
வழக்கமாக இவர்கள் ஓட்டேரியில் உள்ள வீட்டில் தங்குவது வழக்கம். தினமும் காலை
ஜமாலியா பகுதியில் உள்ள வீட்டிற்கு வந்து அதனை சுத்தம் செய்து விட்டு செல்வது
வழக்கம். இந்த நிலையில் இன்று காலை அகமது அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்து 100 சவரன் தங்க நகைகள், 13 லட்சம் ரூபாய் ரொக்க பணம் உள்ளிட்டவை காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அகமது தகவல் தெரிவித்திருக்கிறார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் காவல் அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
NEWS EDITOR : RP