”இந்தியாவின் தற்போதைய கடனும் சீனாவைப் போன்று அதிகமாக உள்ளது. இந்தியாவின் கடன் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 81.9% உள்ளது. சீனாவின் கடன் அந்நாட்டின் ஜிடிபியில் 83% உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு இந்தியாவின் கடன் 75% மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை நடப்பு நிதியாண்டில் 8.8% என கணிக்கப்பட்டுள்ளது.இதில் பெரும்பகுதியான 5.4% வட்டிக்கான செலவினங்களால் ஏற்படுகிறது. முதன்மை பற்றாக்குறை 3.4% உள்ளது. சீனாவைப் போல வரும் ஆண்டுகளில் இந்தியாவின் கடன் அதிகரிக்க வாய்ப்பில்லை. அடுத்த 5 ஆண்டுகள் முடிவில் இந்தியாவில் கடன் சதவீதம் 1.5% குறைந்து 80.4% ஆக இருக்கும் என எதிா்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் தொடர்ச்சியான வளா்ச்சி அதற்கு காரணமாக இருக்கும்.
சீனாவுடன் ஒப்பிடும்போது இந்திய கடன்களில் இடர்ப்பாடுகள் குறைவாக உள்ளன. நாட்டின் நிதித் தேவைகளைக் கடினமாக்காத வகையில் அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியமில்லாத நீண்டகால முதிர்வுகள் கொண்டதால் இந்திய கடன்களுக்கு இடர்ப்பாடுகள் குறைவாக இருக்கின்றன. மேலும், இந்தியாவின் கடன்கள் பெரும்பாலும் உள்நாட்டுக் கடனாகவும், உள்நாட்டு நாணயத்தில் பெறப்பட்டிருப்பதாலும் இடர்ப்பாடுகள் முடக்கப்படுகின்றன. அதேநேரத்தில், இந்தியாவின் சில மாநிலங்கள் அதிக கடன்சுமையை கொண்டுள்ளன. இது இந்தியாவுக்கும் குறிப்பிடத்தக்க இடர்ப்பாடுகள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன” இவ்வாறு அவர் கூறினார்.
NEWS EDITOR : RP