விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் லியோ. லலித் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில், சதீஷ்குமார் கலை இயக்கத்தில், அன்பறிவு ஸ்டண்ட் இயக்கத்தில், தினேஷ் நடன இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. விஜய் ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள இந்த படத்தில் சஞ்சய்தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் என நடிகர் பட்டாளமே களமிறங்கியுள்ளனர்.‘லியோ’ திரைப்படத்தின் டிரைலர் கடந்த 5-ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியானது. வெகுநாட்களாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தின் டிரைலர் மிகப்பெரிய கவனத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களால் இந்த டிரைலர் பார்க்கப்பட்டு சாதனைப் படைத்தது.லியோ திரைப்படத்தின் முதல் காட்சி படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னரே, அதாவது அக்.18ம் தேதி மாலை மற்றும் இரவு என இரண்டு காட்சிகள் திரையிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் பின்னர் அக்.19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கும், காலை 7 மணிக்கும் சிறப்பு காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் அக்.20 முதல் 24-ம் தேதி வரை காலை 7 மணிக்கு ‘லியோ’ சிறப்பு காட்சி திரையிடவும், நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ‘லியோ’ படத்தின் மூன்றாவது பாடலான ‘அன்பெனும்’ இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பாடல் வைரலாகி வருகிறது.
NEWS EDITOR : RP