அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க் கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி (வயது 37) உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
குடியரசு கட்சியின் வேட்பாளர் போட்டியில் உள்ள விவேக் ராமசாமி பல்வேறு தரப்பினரை சந்தித்து தேர்தலுக்கான ஆதரவை திரட்டி வருகிறார். இந்த நிலையில், பொதுமக்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றில் விவேக் ராமசாமி பங்கேற்று இருந்தார்.கேரளத்தில் இருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த தம்பதிக்கு பிறந்தவர் விவேக் ராமசாமி. தொழிலதிபரான இவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் இளம் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது விவேக் ராமசாமியிடம் பேசிய தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஒருவர், “அடுத்த அதிபராக உங்களை பார்க்க விரும்புகிறேன். அதற்காக வாழ்த்துகள். எனது பெற்றோரும் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்” எனத் தெரிவித்தார். உடனடியாக “நானும் தமிழ் பேசுவேன், பாலக்காடு தமிழ்” என்று தமிழில் சிரித்தபடி அவர் பதிலளித்தார். விவேக் ராமசாமியின் ட்விட்டர்(எக்ஸ்) பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொலி வைரலாகி வருகின்றது.
NEWS EDITOR : RP