உர்மில் படேல் என்பவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ரொட்டியை இரு துண்டுகளாக வெட்டி அதன் மீது தக்காளி சாஸை ஊற்றுகிறார். பின்னர் முந்திரி, திராட்சை மற்றும் சீஸ் ஆகியவற்றை அதன் மேல் உற்றுகிறார். பின்னர் அது oven இல் வைத்து லேசாக சூடாக்கப்படுகிறது.இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில், பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். புதிய வகை உணவு செய்வது வரவேற்க தகுந்த செயல்தான். ஆனால் இப்படியா என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அப்பா.. பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்ற ஆசை பிறப்பதாக மற்றொருவர் கமெண்ட் பதிவு செய்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து சீஸ் மற்றும் உலர் பழங்கள் வைத்து அதனை அலங்கரிக்கிறார். அவ்வளவு தான். ட்ரை ப்ரூட் பீட்சா ரெடி. இந்த பீட்சா அகமதாபாத்தில் உள்ள மானெக் சவுக்கில் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
NEWS EDITOR : RP