தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூ.79.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.79,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.44,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.5,521-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
NEWS EDITOR : RP
Please follow and like us: