தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன். இந்தப் படத்தை அடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். விக்ரமுடன் தாண்டவம், ஐ, தனுஷுடன் தங்க மகன், விஜய்யுடன் தெறி, உதயநிதியின் கெத்து, ரஜினிகாந்துடன் 2.0 உட்பட பல படங்களில் நடித்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
நீண்டநாள்கள் கழித்து அருண் விஜய் நடிக்கும் ‘மிஷன் அத்தியாயம் 1’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கு முன் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் போது ஜார்ஜ் என்ற தொழிலதிபரைக் காதலித்து கொண்டிருந்த எமி திருமணம் செய்துகொள்ளாமலே ஆண் குழந்தை பெற்றேடுத்தார்.
அதையடுத்து, அவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சில தனிப்பட்ட பிரச்னையால் இருவரும் பிரிந்தனர்.இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் எமி ஜாக்சன் புதிய தோற்றத்தில் உள்ள தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்படங்கள் வைரலானதால் ரசிகர்கள், இது எமியா இல்லை ஜாக்சனா என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, எட்வர்டு என்ற ஹாலிவுட் நடிகரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறோம் என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார்.
NEWS EDITOR : RP