பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபடுகிறது. 24 ஆண்டுகளாக கிடப்பில் போட்டபட்ட மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. வேவ்வேறு காலகட்டங்களாக இந்த மசோதா நிறைய எதிர்ப்புகளை சந்தித்தது. வடஇந்தியாவில் சட்டமன்றத்தில் அதிகமாக பெண்கள் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் குறைவாக இருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரை கட்சிக்குள் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருக்கிறார்கள்.
தமிழக சட்டப்பேரவையில் 33 சதவீதம் பெண்கள் சட்டசபையில் அமர வேண்டும். நேற்று பாராளுமன்றத்தில் கனிமொழி உட்பட பெண்கள்தான் இது தொடர்பாக அதிகமாக பேசினார்கள். இதில் எந்த சதியும் இல்லை. 1976 ஒப்புக்கொள்ளப்பட்டு, 2001 இல் நிறுத்தி வைக்கப்பட்டு பிறகு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் சதி என்ற வார்த்தையை முதலமைச்சர் எவ்வாறு பயன்படுத்துகிறார் என தெரியவில்லை.
அதிமுகவும் அண்ணாமலைக்கும் பிரச்சனை இல்லை. தமிழக பாஜகவுக்கும் அதிமுகவிற்கும் பிரச்னை இல்லை. அதிமுகவில் உள்ள தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்னை இருக்கிறதா என தெரியவில்லை. செல்லூர் ராஜு கூறியதை நான் எப்படி அறிவிப்பேன். நான் யாரையும் எங்கேயும் தவறாக பேசவில்லை. என்னுடைய தன்மானத்தை கேள்வி குறியாகும் போது நான் பதில் பேசுவேன். நாளையும் நாளை மறுநாளும் அடுத்த வாரமும் பேசுவேன். தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை.
செல்லூர் ராஜு கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் கூற முடியாது. இரண்டு மூன்று நாட்களாக அதிமுகவின் தலைவர்கள் பேசியதற்கு நான் பதில் கூற முடியாது. தேசியத் தலைவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் பேசுவார்கள். தமிழகத்தில் நான் பாஜக தலைவராக, ஒரு இலக்கு வைத்துள்ளேன். மது ஒழிப்பை பொறுத்தவரை தமிழ்நாட்டின் இலக்கணம் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவை எங்கேயும் எப்போதும் தரக் குறைவாக விமர்சித்தது கிடையாது.
அதிமுக சனாதன தர்மத்தை வேற மாதிரி பேசுவார்கள். நான் கொஞ்சம் அழுத்தமாக கூறுவேன். எனக்கும் அதிமுக தலைவர்களுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. எதையும் நான் பர்சனலாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் ஆக்ரோஷமாக தான் அரசியல் செய்வேன். இது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் தெரியும். திமுக அரசியலை அடியோடு எதிர்க்கிறேன். ஏனென்றால் அது ஒரு விஷம்.தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் கொடுக்க விரும்பினால் அது நன்றாக இருக்காது. 1956 நிகழ்வை கருணாநிதி குறிப்பிட்டு இருப்பார். நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. நான் பேசியது தவறு கிடையாது. அண்ணாவை தர குறைவாக பேசவில்லை. சரித்திரத்தில் இருந்ததை குறிப்பிட்டு இருக்கிறேன்.
1998-ல் ரயில்வே நிகழ்ச்சி ஒன்றில் கருணாநிதி பேசியிருக்கிறார். அனைவரும் பிரதமர் மோடியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்றால் கூட்டணி இருக்கிறது. சனதனாதர்மம் தமிழகத்தில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திமுக வெர்சஸ் சனாதன தர்மம் வேறு. தமிழ்நாட்டில் துணைவேந்தர்களின் தரம் குறைந்து இருக்கிறது. துணைவேந்தர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்கிறார்கள். வெவ்வேறு சித்தாந்தங்கள் இருந்தாலும், மையப்புள்ளியாக பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் உள்ளது.
NEWS EDITOR : RP