கனடாவில் வசிக்கும் அந்நாட்டு குடியுரிமை பெற்ற காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.இந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரவிட்டது.
இதனையடுத்து இந்தியா கனடா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதுஇந்நிலையில், கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு போலி பாஸ்போர்ட் மூலம் பஞ்சாப்பிலிருந்து தப்பிச் சென்ற காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கனடாவில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
NEWS EDITOR : RP