போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் சிவானந்தம் (வயது 34). தொழிலாளி. இவரது மனைவி தனம். இந்த தம்பதிக்கு குழந்தைகள் உள்ளனர். சிவானந்தத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.இதனால் மனமுடைந்த சிவானந்தம் மாமனார் வீட்டு முன்பு உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சம்பவத்தன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் தனம் கோபித்துக் கொண்டு, கிருஷ்ணகிரி அருகே உள்ள மலைச்சந்து கிராமத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 17-ந் தேதி மாமனார் வீட்டுக்கு சென்ற சிவானந்தம் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
NEWS EDITOR : RP