குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்..!!

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டம் அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளியில் குழந்தைகள் மையத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகை 24 லட்சத்து 9 ஆயிரத்து 927 ஆகும். நமது மாவட்டத்தில் 49 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 284 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. நமது மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், காட்டாங்கொளத்தூர் வட்டம், அனுமந்தபுத்தேரி நகராட்சி தொடக்க பள்ளி அருகில் குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாச்சிப்பணிகள் துறையின் சார்பாக 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தொடங்கி வைத்தார். வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் அனைத்து அங்கன்வாடி மையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் வழங்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் 1266 அங்கன்வாடி மையங்களில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 913 குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள், மற்றும் கிராம சுகாதார நர்சுகள் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த வைட்டமின் ஏ திரவம் உட்கொள்வதன் மூலம் வைட்டமின் ஏ குறைபாடுகளான மாலைக்கண், வறண்ட தோல், பார்வை குறைபாடு போன்ற நோய்கள் தடுக்கப்படுகின்றன. எனவே, பெற்றோர்கள் அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் உட்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை பணியாளர்களுடன் இணைத்து அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram