இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் அட்டவணையை, ஐசிசி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. உலகக் கோப்பை தொடருக்கு 2 மாதங்கள் இருக்கும் நிலையில் தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணையில் ஒட்டுமொத்தமாக 48 போட்டிகள், 46 நாட்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரையில் இந்தியா மற்ற நாடுகளுடன் இணைந்து தான் உலகக் கோப்பை தொடரை நடத்தியுள்ளது. ஆனால் முதல் முறையாக இந்தியா தனியாக உலகக் கோப்பை தொடரை நடத்துகிறது. தொடக்க போட்டியில் அக்டோபர் 5-ம் தேதி, நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி நியூசிலாந்து அணியை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்கொள்ளவுள்ளது. அதே போல போட்டியை நடத்தும் இந்தியா, அக்டோபர் 8-ம் தேதி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்கிறது.செப்.22ஆம் தேதி வரை உலகக் கோப்பை அணியில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என ஐசிசி தெரிவித்துள்ளதால் ஆஸி. அணிக்கு போட்டிகளில் பங்கேற்கவுள்ள அணியை அறிவிக்க இன்னும் நேரமிருக்கிறது. அதற்குள்ளாக டிராவிஸ் ஹெட் நிலைமை குறித்து அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிரது. மேலும் லபுஷேன் இருக்கிறாரா என்பதும் தெரியவரும்.
இந்நிலையில் உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவுடன் ஆஸி. அணி ஒருநாள் தொடரில் மோதுகிறது. இதில் முக்கியமான வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளார்கள். காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடரில் முக்கிய வீரர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செப்.22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளது.இந்த போட்டிகளில் பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்பாட், அலெக்ஸ் கைரி, நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேசல்வுட், ஜோஸ் இங்கிலிஸ், மாட் ஷார்ட், ஸ்பென்செர் ஜான்ஸன், மார்னஸ் லபுஷேன், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அஸ்டன் அகர், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. மாட் ஷார்ட், ஸ்பென்செர் ஜான்ஸன் ஆகியோர் முதன்முதலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
NEWS EDITOR : RP