விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த வாரம் ஒருகிலோ மல்லிகைப்பூ ரூ.600-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக ரூ.1,500 முதல் ரூ.1,800 வரை உயர்ந்துள்ளது. புதுக்கோட்டை, கடலூர், திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களை தொடர்ந்து காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ தற்போது 800 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரளிப்பூ 200 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லைப்பூ 1,200 ரூபாய்க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
NEWS EDITOR : RP
Please follow and like us: