சென்னையில் வசிக்கும் மக்கள் விடுமுறை தினத்தன்று தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். தொடர் விடுமுறை வந்தால் பெரும்பாலான மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகளின் வசதிகளுக்காக, சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவு இயக்கப்பட்டன.
NEWS EDITOR : RP
Please follow and like us: