தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ‘சூது கவ்வும்’ படத்தில் நடிக்கத் தொடங்கிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பலவேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான ‘போர்தொழில்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் அசோக் செல்வனுக்கு இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் ’சிதம்பர ரகசியம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ உள்பட பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் அருண் பாண்டியன். பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.
அருண் பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன், மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். ஏற்கனவே இருவருக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில், கீர்த்தி பாண்டியன், தமிழ் சினிமாவில் தும்பா என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து அன்பிற்கினியாள் என்கிற படத்தில் அவர் நடித்திருந்தார். இந்நிலையில், இவருக்கு நடிகர் அசோக் செல்வனுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
NEWS EDITOR : RP