தேனி மாவட்டம் கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு சைக்கிளை வழங்கினார். இதில், கம்பம் நகராட்சி தலைவர் வனிதா நெப்போலியன் கலந்துகொண்டார். முன்னதாக பள்ளி ஆசிரியர் வரவேற்புரை ஆற்றியபோது, எம்.எல்.ஏ. பெயரை தொடர்ந்து நகராட்சி தலைவர் பெயரை கூறாமல் தி.மு.க. கட்சி நிர்வாகிகளின் பெயரை கூறினார். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பின்னர் விழா முடிந்ததும் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. புறப்படும்போது, அவரிடம் அரசு நிகழ்ச்சி நிரலில் கட்சி நிர்வாகிகளின் பெயர்களுக்கு பின்னால் நகராட்சி தலைவர் பெயர் போட்டுள்ளதாக கூறி அவரது ஆதரவு தி.மு.க.வினர் முறையிட்டனர். அப்போது அங்கிருந்த எம்.எல்.ஏ. தரப்பு தி.மு.க.வினர் தட்டிக்கேட்டனர். இதனால் 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
NEWS EDITOR : RP