டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க மத்திய அரசு முன்மொழியவில்லை ~ நிதின் கட்கரி..!!

Spread the love

நாட்டில் டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியானது.

மேலும் நாட்டில் டீசல் வாகனங்களினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரைத்துள்ளார் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளர். இது தொடர்பாக தனது தள பக்கத்தில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் நிதின் கட்கரி கூறியுள்ளதாவது:

டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரி விதிக்க மத்திய அரசு முன்மொழியவில்லை. 2070க்குள் கார்பன் வெளியீட்டு அளவு நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், ஆட்டோமொபைல் விற்பனையில் விரைவான வளர்ச்சிக்கும் ஏற்ப, தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை தீவிரமாக ஏற்றுக்கொள்வது அவசியம்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram